ஜெ.தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்தது! தனது முகநூல் பக்கத்தில் அறிவித்தார்! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா-மாதவன் தம்பதியினருக்கு நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. இதற்காக இருவரும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தனர். இந்த நிலையில் தீபாவுக்கு வாடகைத்தாய் மூலம் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளதாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தகவல்கள் வெளியாகின.

ஆனால் அந்த குழந்தை எப்படி பிறந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கு முன் பலமுறை கருத்தரித்த நிலையிலும் குழந்தை பிறப்பதில் சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அரசியலில் இருந்து விலகுவதாகவும் ஜெ.தீபா அறிவித்திருந்தார்.

ஜெ.தீபா மற்றும் மாதவனுக்கு அரசியல் ரீதியிலும், சொந்த காரணங்களுக்காகவும் சில மிரட்டல்கள் உள்ளதால் இது குறித்தான தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. சில தினங்களில் இதுகுறித்து ஜெ.தீபா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனது முகநூல் பதிவில் "எனது பிறந்தநாளில் பிறந்த அந்த குழந்தை கடவுளின் வரம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்பொழுது பாட்டியாகி உள்ளார். எனக்கும் மாதவனுக்கும் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது" என பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JDeepa gave birth to a baby girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->