போக்ஸோ வழக்கில் தேடப்படும் மதபோதகர் ஜான் ஜெபராஜ்! முன்ஜாமீன் கேட்டு மனு!
JebaRaj Bail Apply HC
போக்ஸோ குற்றச்சாட்டில் போலீசாரால் தேடப்பட்டுவரும் கோவை கிறிஸ்துவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடத்தில் மதபோதகராக இருந்த ஜான் ஜெபராஜ், சமூக வலைதளங்களில் கிறிஸ்தவ பாடல்கள் மூலம் பிரபலமானவர்.
கடந்த மே 21ஆம் தேதி, கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் அவரது வீட்டில் விருந்தொன்று நடைபெற்றதாகும். இதில் பங்கேற்ற இரண்டு சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை தடுக்கும் நோக்கில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ள ஜான், "எனது மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் காரணமாகவே இந்த புகார் உருவாகியுள்ளது; போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயார்" என தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.