அரியலூர் அருகே அழகிகளை வைத்து 'அந்த' தொழில்... சுத்துப்போட்ட தட்டிதூக்கிய போலீஸ்.!
JEYANKONDAM POLICE CRIME CASE JULY
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் நீண்ட நாட்களாக விபசாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைத்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும், கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்திரா உள்பட 5 பெண்கள் சில ஆண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அவர்கள் தொடர்ந்து விபசார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வீரமணி அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் சந்திரா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரகுபிரசாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், காவல்துறையினர் இந்த விபசார தொழிலில் ஈடுபட்ட மற்றவர்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary
JEYANKONDAM POLICE CRIME CASE JULY