சென்னை வருகிறார் ஜே.பி. நட்டா: தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனையா?
JP Natta coming Chennai
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் இன்று சென்னையில், பா.ஜ.க மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' என்ற நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
சுமார் 199 சட்டப்பேரவை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை பொதுமக்களிடையே மத்திய அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார். இதனை தொடர்ந்து 200 வது சட்டப்பேரவை தொகுதியான துறைமுகம் தொகுதியில் இன்று நடைபயணம் நடைபெற உள்ளது.
இதனை அடுத்து மாலை 7 மணி அளவில் தங்கச்சாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டத்தில் ஜே.பி. நட்டா தலைமையில் தொகுதி பங்கீடு, தேர்தல் கூட்டணி போன்றவற்றை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.