சாதியப் பிரச்னைகள் நக்சலைட் பிரச்னை போன்றது.!! உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து.!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பட்டியலின சமூகத்தை சார்ந்தவரை இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராயகிரி சீனிவாசன், மதிவாணன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கை தென்மண்டல காவல்துறை தலைவர் என். கண்ணனின் நேரடி கண்காணிப்பில் டிஎஸ்பி விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மேல் கவனம் செலுத்தப்படாவிட்டால் வகுப்புவாத மற்றும் சாதிய மோதல்களுக்கு வழிவகை செய்து கடுமையான விளைவுகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.

கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என புதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என மாவட்ட காவல்துறைக்கு நீதிபதி சதிகுமார் சுகுமார குரூப் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judge opined Caste problems naxalites problem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->