தோல்வி பயத்தில் குழப்பமான பேச்சு... - கி. வீரமணி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு தோல்வி உறுதியாகி விட்டதால் பிரதமர் மோடியின் பேச்சில் குழப்பம் தெரிந்தது என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். 

கும்பகோணம், சாக்கோட்டையில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான ஆரம்ப அரசு உதவி பெறும் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை வீரமணி திறந்து வைத்தார். 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் தோல்வி உறுதி என்பதை பிரதமர் நரேந்திர மோடி பயணத்தில் உறுதி செய்து விட்டார். 

அதன் எதிரொலி தான் அவரது குழப்பமான பேச்சு, மோடியின் ஆட்சியில் வேதனை மட்டும் தான் உள்ளதே தவிர சாதனை ஒன்றுமே இல்லை. 

பிரதமர் மோடி பல்லடத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி சிறப்பான ஆட்சி என தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு முன்பு அவரது கட்சியினர் வந்தபோது ஜெயலலிதா ஆட்சியை ஊழல் ஆட்சி என தெரிவித்தனர். 

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள 400 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K Veeramani speech goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->