திடீர் திருப்பம்: கள்ளச்சாராய விவகாரத்தில் ஒரு நல்ல செய்தி சொன்ன மாவட்ட ஆட்சியர்! - Seithipunal
Seithipunal


கள்ளச்சாலையும் குடித்து கவலைக்கிடத்திலிருந்த ஐந்து பேரின் உடல்நிலை முன்னேறி உள்ளதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. 

இன்று காலை வரை பலி எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரும் கண் பார்வையை இழந்துள்ளதாகவும், சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற தொடங்கியுள்ளது. இதுவரை 800 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைக்கு வராமல் வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவமனையில் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேரின் உடல்நிலை முன்னேறி உள்ளதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், கள்ளச்சாராய புழக்கம் இருந்த இருபது இடங்களில் மருத்துவக் குழுவினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், விஷ சாரயத்தால் உயிரிழந்த 39 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalalkurichi Kallasarayam issue District collector info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->