சென்னை கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம் - எதையும் நிரூபிக்க முடியாது - நீதிபதி பிறப்பித்த உத்தரவு!
Kalashetra abuse case issue HC order
சென்னை கலாஷேத்ரா முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில், அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, கலாஷேத்ரா முன்னாள் மாணவி அளித்த புகாரில், கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவர் தாக்கல் செய்த ஜாமின் கோரும் மனு மீது, அவருக்கு ஜாமின் வழங்கினால் பாதிக்கப்பட்ட பல மாணவிகள் புகார் அளிக்க வர மாட்டார்கள் என்று, மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் காவல்துறை தரப்பிலும் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீஜித் கிருஷ்ணா ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையின் போது, "22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், மருத்துவ ரீதியாக அதிகம் நிரூபிக்க முடியாது" என்று ஸ்ரீஜித் கிருஷ்ணா தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன் வைத்தார்.
அப்போது நீதிபதி, ஸ்ரீஜித் கிருஷ்ணாவை ஏன் சிறையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்? சம்மன் அனுப்பி அவரை விசாரிக்கலாமே என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.
அப்போது காவல்துறை தரப்பில், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால வாசம் கோரியதால், அடுத்த விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
English Summary
Kalashetra abuse case issue HC order