கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வளவு பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 

கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம். மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இதற்கு பின்னால் மிகப்பெரிய அதிகாரமிக்கவர்கள் உள்ளனர். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற போது இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானமும் சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் இருக்கிறது. ஏழை மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு திமுக. வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார் மாவட்ட கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi ADMK Edappadi palaniswami SpuriousLiquor CM Stalin Resign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->