#Breaking: கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில், 5 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம்.! அதிரடி உத்தரவு பிறப்பிப்பு.!
Kallakurichi Case Villupuram Extend Coustudy
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாய் செல்வி சின்னசேலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை இன்று (26-ம் தேதி) தெரிவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு குறித்து விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிப்பதாக நீதிபதி இளந்திரையன் அறிவித்து இருந்தார்.
இத்தகைய நிலையில், விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், 5 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 14 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kallakurichi Case Villupuram Extend Coustudy