கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி : தொழிற்சாலைகளில் மெத்தனால் இருப்பை கண்காணிக்க உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழகத்தின் வேறு எந்தெந்த பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர் என்பது  குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் கருணாபுரம் பகுதியில் விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப் பொருள் அதிகளவில் கலந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மெத்தனால் என்ற வேதிப் பொருளின் பயன்பாடு குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தப் பட்டுள்ளது. மேலும் மெத்தனாலை எப்படி உரிய முறையில் கையாள வேண்டும் என்பது குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள 11 தொழிற்சாலை உரிமையாளர்கள்  பங்கேற்றனர். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளி ஆட்களுக்கு மெத்தனால் விற்பனை செய்யக் கூடாது. மேலும் தொழிற்சாலைகளில் மெத்தனால் இருப்பை கவனமாக கையாள வேண்டும் என்பன போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Death Case Government Ordered to Monitor Methanol availability in Factories


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->