கள்ளக்குறிச்சி || சட்ட விரோதமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள்.! அதிரடி உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராயத்தை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கள்ளசாராயம் காய்ச்சிபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சாராயம் வியாபாரியிடம் தொடர்பில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் என்பவர் சாராய வியாபாரிகளிடம் இரகசிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். 

மேலும், தனது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறிய காரணத்தினால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துறைரீதியான பரிந்துரையின் பேரில் விழுப்புரம் சரக காவல்துறை துணைதலைவர், அவர்கள் சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சந்திரசேகர் என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இதற்கு முன்பு கீழ்குப்பம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக்காவலர் ஒருவர் சாராய வியபாரிடம் கையூட்டு பெற்றதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது ஆகும்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது,

"அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பிலிருந்து காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணைபோனாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi district Superintendent of Police order to all police department


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->