கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தாலுகாவில் 144 தடை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தாலுகாவில் 144 தடை உத்தரவை பிறப்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பு உள்ளார்.தற்போது போராட்டக்காரர்களால் தாக்குதலுக்குள்ளான சக்தி மெட்ரிக் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

தனியார் பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனம் தீ வைக்கப்பட்ட பகுதியையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு வருகிறார்.

இந்த வன்முறை சம்பவத்தில் 15க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறை கண்காணிக்கவில்லை என சொல்வது தவறு; தொடர்ந்து கண்காணித்து தான் வருகிறோம் என்றும் எஸ்பி தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், "போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம், ஆனால் பலனளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும், மாவட்ட தீயணைப்புத் துறை  தெரிவிக்கையில், "தீயணைப்புத் துறை வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். தீயை அணைப்பதற்கு தேவையான உபகரணங்கள் கைவசம் உள்ளன. உள்ளே செல்ல முடியவில்லை, 3 வாகனங்களுடன் காத்திருக்கிறோம். போலீசார் பாதுகாப்பு அளித்தால் தான் உள்ளே சென்று தீயை அணைக்க முடியும்" என்று  தீயணைப்புத் துறை தெரிவித்திருந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi issue 144


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->