கள்ளக்குறிச்சி வன்முறை.. 192 பேர் கைது.! தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை.!!
kallakurichi issue 192 peoples arrest
கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி பள்ளி விடுதியில் தங்கி இருந்து பன்னிரண்டாம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
ஆனால் தனது மகளின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக மாணவி தாயார் புகார் தெரிவித்து இருந்தார். அதற்கேற்ற போல பிரதேச பரிசோதனையில் மாணவியின் உடலில் காயங்கள், ஆடைகளில் ரத்த கரைகளும் இருந்தது தெரியவந்தது. இதனால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது எடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைத்தனர்.
அதன்பிறகு மக்கள், மாணவ அமைப்பில் என பல்வேறு தரப்பினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதால், போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி வளாகத்திற்குள் இருந்து பேருந்துகளை தீ வைத்து எரித்தும், போலீஸ் வாகனத்தை தீ விபத்து எரித்தும் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்ததால் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். பதிலுக்கு போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். நிலைமை விபரீதமான அதை அறிந்து, இந்த விவகாரத்தை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 192 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
kallakurichi issue 192 peoples arrest