கள்ளச்சாராய வழக்கு! சிக்கலில் சிக்கிய 2 டிஎஸ்பி உள்ளிட்ட 9 போலீஸ்! அதிரடியில் இறங்கிய சிபிசிஐடி! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரண விவகாரத்தில், இரண்டு போலீஸ் டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட ஒன்பது போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது, இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த 229 பேர் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்ததில், உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதில் கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உடல் உபாதைகளுக்கு உட்பட்டு 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

தற்போது வரை 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த வழக்கில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி போலீசாரல் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்தால் தான், கள்ளச்சாரய பின்னணியில் உள்ளவர்கள் வெளி வருவார்கள், அவர்களை கைது செய்ய முடியும், திமுகவை சேர்ந்து இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவோடு தான் இந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட ஒன்பது போலீசாரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, அவர்களுக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள முக்கிய சாராய வியாபாரி கன்னுகுட்டியிடம் போலீசார் மாமுல் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டும், கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாரயம் விற்பனை நடந்தும், எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் போலீசார் உடந்தையாக செயல்பட்டது தெரியவரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட போலீசாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Kallasarayam CBCID Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->