கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு ஆப்பு! எஸ்பி சஸ்பெண்ட்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், மலிவான விலையில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த பத்துக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கள்ளசாராயத்தல் தான் அவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினார்.

இதற்க்கு மறுப்பு தெரிவித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், உயிரிழந்தவர்களின் உடல் ஆய்வு செய்த பின்னே அவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பது தெரியவரும். அதுவரை இந்த மரணத்தை கள்ளச்சாராய மரணம் என்று கூறவேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடம் என்றும், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 14 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Kallasarayam issue TNGovt Order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->