திமுக அரசுக்கு எதிரான போராட்டம் ரத்தா? என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? ஷாக் கொடுத்த காவல்துறை!
Kallakurichi Kallasarayam Issue VCK Protest police order
சென்னையில் இன்று மாலை நாலு மணிக்கு விடுதலை சிறுத்தை கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் மரணங்களை கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், தமிழக அரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்திருந்த போராட்டத்திற்கு, காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தற்போது வரை 61 பேர் பலியாகி உள்ள நிலையில், இந்த கள்ளச்சாராயம் மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று, நேற்று பாஜக தரப்பில் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
இன்று தமிழக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு க ஸ்டாலினை பதவி விலக கோரியும், அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவின் கூட்டணி கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியும், தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்திருந்தார்.
இன்று காலை கூட இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு அறிவிப்பை திருமாவளவன் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொன்னபடி போராட்டத்தை நடத்துவாரா திருமாவளவன்? அல்லது கூட்டணி கட்சியின் ஆட்சி என்பதால், காவல்துறை அனுமதி மறுப்பை காரணம் காட்டி பின்வாங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
English Summary
Kallakurichi Kallasarayam Issue VCK Protest police order