கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவரம்: விசிக மாவட்ட செயலாளரிடம் விசாரணை!
Kallakurichi kaniyamur School Girl Death case VCK Diravida Mani
கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தை அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவியின் உயிரிழப்பிற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்று கூறி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் ஒருகட்டத்தில் கலவரமாக வெடித்தது. அப்பகுதியில் உள்ளவர்களும் போராட்டகாரர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில் பள்ளி வாகனங்கள் கொளுத்தப்பட்டன. வகுப்பறைகள் சூறையாடப்பட்டன. இந்த சம்பவம் குறித்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திராவிட மணி மற்றும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் ஆகியோர் ஸ்ரீமதி மரணத்தில் பள்ளி வளாகத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை, வாட்ஸ் அப்பில் குழு அமைத்து ஒருங்கிணைத்துள்ளனர்.
இது குறித்து இவர்கள் இருவர் மீதும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சிறப்பு புலனாய்வு குழு இது குறித்து விசிகவின் மாவட்ட செயலாளர் திராவிட மணிக்கு சம்மன் அனுப்பியது.
இதனை தொடர்ந்து நேற்று, கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகே உள்ள கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவர விசாரணை சிறப்புப் புலானாய்வுக் குழு அலுவலகத்தில், விசிகவின் மாவட்ட செயலாளர் திராவிட மணி தனது வழக்கறிஞர்களுடன் ஆஜரானார்.
English Summary
Kallakurichi kaniyamur School Girl Death case VCK Diravida Mani