கள்ளச்சாராய சாவுக்கு காரணமான முக்கிய புள்ளி சென்னையில் கைது! மெயின் சப்ளையே இவர்தானாம்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் ஆந்திராவில் இருந்து ‘மெத்தனாலை’ கைமாற்றி விட்டதாக தொடர்பாக மரக்காணத்தை சேர்ந்த மாதேஷ் என்பவரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்து உள்ளனர். 

முன்னதாக சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி காவல்துறை கைது செய்தது. புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி விநியோகம் செய்தவர் ஜோசப் ராஜா  எனது குறிப்பிடத்தக்கது.

கருணாபுரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மாதேஷ், ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தற்போதுவரை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49ஆக உள்ளது. மேலும் 30 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Karunapuram SpuriousLiquor mathesh arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->