18 நாட்களுக்கு பின், மீண்டும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு.!   - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். 

இதனால், பள்ளி சேதமடைந்து இருக்கிறது.  இதுகுறித்து CBCID போலிஸ் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், இன்று இந்த பள்ளி மாணவர்களுக்கு வேறொரு இடத்தில வைத்து நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.

18 நாட்களுக்கு பின், மீண்டும் இன்று 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு வந்து சென்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi Sakthi school started again


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->