#கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்களை ஏன் கைது செய்தீர்கள்? - தமிழக போலீசுக்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜாரக உத்தரவிட நேரிடும் என தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாய் செல்வி சின்னசேலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர். 

இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த வாரம் விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதனை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை வருகின்ற 26-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi school bail case hc order to tn police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->