#கள்ளக்குறிச்சி : ஒரே நேரத்தில் 3 பெண் பிள்ளைகள்.. அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே குமாரமங்கலத்தை சேர்ந்த சுபலட்சுமி செல்வராஜ் என்ற தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சுபலட்சுமி கடந்த 15 நாட்களுக்கு முன் மகப்பேறு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 2ஆம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந்தன. 

இந்த குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டு பச்சிளம் குழந்தைகள் அனைத்தும் கவனிக்கப்பட்டு வந்தது தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர். 

இவர்களது குடும்பம் மிக எளிமையான நிலையில் இருக்கும் காரணத்தால் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi women get 3 girl baby


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->