பக்தர்களின் வெள்ளத்தில் தேரில் அசைந்து வரும் கள்ளழகர்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் சிறப்புடையதாகும்.

கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இந்த தேரோட்டத்தைத் தொடர்ந்து இன்று இரவு புஷ்ப பல்லாக்கு சேவை நடைபெறும்.

மேலும், நாளை 22-ந் தேதி தீர்த்தவாரி, நாளை மறுதினம் 23-ந் தேதி உற்சவ சாந்தி உள்ளிட்டவை நடக்கிறது. இதையடுத்து 4-ந் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெறும். அன்று இரவு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். அத்துடன் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவும், கோவில் நிர்வாகமும் செய்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallazhagar temple aadi chariat festival in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->