நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உருக்குகிறது - கமல்.!
kamal condoles 7 peoples died landslide
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் அதி மிக கனமழை பெய்தது. அதிலும் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மகா தீப மலையில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதில் 7 பேர் சிக்கிய நிலையில் தீவிர மீட்புப்பணிக்கு பிறகு அவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது. இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- "பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் நெஞ்சத்தை உருக்குகிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் விரைந்து கிடைக்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
kamal condoles 7 peoples died landslide