காமராஜர் பிறந்தநாள்... காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்த தமிழக முதல்வர்.!
Kamaraj birthday CM expanded breakfast scheme
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளான இன்று தமிழக அரசு சார்பில் திருவள்ளூர், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரி அரசு உதவி பெறும் புனித அன்னம்மாள் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மதிய உணவு திட்டத்தில் முன்னோடி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 3995 அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர். பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய தமிழக முதல்வர் பள்ளிகள் உடன் அமர்ந்து காலை உணவை அருந்தி மகிழ்ந்தார்.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kamaraj birthday CM expanded breakfast scheme