காஞ்சிபுரத்தில் வழிப்பறி செய்த நபர் கைது! - Seithipunal
Seithipunal


நெல்லை : ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 26). இவர் காஞ்சிபுரம் அடுத்து உள்ள பிள்ளைச்சத்திரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். வீட்டின் அருகில் இரும்பு கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.

வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்ற போது எதிரில் வந்த காஞ்சிபுரம் செட்டியார்பேட்டையை சேர்ந்த சின்னராசு என்ற சின்னா(23), வேல்முருகனை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

மேலும் வேல்முருகனை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி அவரிடம் இருந்து ரூ.1 ,100 ஐ பறித்து கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். 

இது குறித்து, வேல்முருகன் காஞ்சிபுரத்தில் உள்ள தாலுகா காவல்நிலையத்திற்க்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் அடிப்படையில் சின்னராசுவை போலீசார் தேடினர். சின்னராசு தனது வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். 

பின்னர் சின்ராசுவை காஞ்சிபுரத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஒப்படைத்து காஞ்சிபுரம் கிளைசிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த கத்தி மற்றும் ரூ.1 ,100-யை போலீசார் கைப்பற்றி வேல்முருகனிடம் பணத்தை ஒப்படைத்தனர்.    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanchipuram robbery case issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->