கோவை பள்ளி மாணவி விவகாரம்; பகுத்தறிவின்றி நடந்து கொண்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கை; கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் சித்பவானந்தா மெட்ரிக் என்ற பள்ளியில், 08-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பூப்பெய்தியிருந்த காரணத்தினால் முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற 07-ஆம் தேதி மற்றும் 09-ஆம் தேதிகளில் தேர்வு எழுதுவதற்கு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன், அவரை வகுப்பறையின் படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் மீது கண்டனங்கள் எழுந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கனிமொழி எம்.பி. தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது;

'கோவை பொள்ளாச்சியில் தனியார் பள்ளி ஒன்றில், பருவம் எய்திய மாணவியை வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பி தரையில் அமர்ந்து தேர்வு எழுத வைத்துள்ள செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. அறிவியல் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவியைக் கொஞ்சம் கூட பகுத்தறிவின்றி நடத்தியுள்ள பள்ளி நிர்வாகிகளுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இதில் தொடர்புள்ள ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanimozhi MP urges strict action against teachers who acted irrationally in the case of a school student in Coimbatore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->