கணியாமூர் தனியாள் பள்ளி சூறை : தூக்கி, தூக்கி அடித்து உடைத்த 3 இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் பகுதியில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. 

மனைவியின் இந்த மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்ததில், அப்பள்ளி அடித்து, உடைத்து சூறையாடப்பட்டது.

இந்த சம்பவத்தில் பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக சுமார் 200 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் உட்பட 3 பேரை, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கு சிபிஐ சிபிசிஐடி போலீஸ் சர்வீஸ் மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளியின் சுவரை பெரிய சுத்தியால் சேதப்படுத்திய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரையும், வகுப்பறையில் புகுந்து மேஜை நாற்காலிகளை தூக்கி, தூக்கி அடித்து உடைத்து நொறுக்கிய இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kaniyamur school violence case 3 more arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->