பாலில் தூக்க மாத்திரை! 14 வயது சிறுமி வன்கொடுமை! நம்பவைத்து கழுத்தை அறுத்த தாயின் ஆண் நண்பன்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் தூக்க மாத்திரை கொடுத்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரியில் கணவனைப் பிரிந்த குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர், அனி என்ற 37 வயது நபருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் தனது இரு மகள்களையும் தனது ஆண் நண்பரான அனி-யிடம் விட்டுவிட்டு சென்னை சென்றுள்ளார். 

கடந்த வாரம் அந்த பெண் வீடு திரும்பிய நிலையில், அவரின் 14 வயது மகள் உடல் சோர்வாக இருந்துள்ளார். இது குறித்து மகளிடம் தாய் விசாரணை செய்ததில், அந்தப் தாயின் ஆண் நண்பர் அனி, சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. 

இதனை அடுத்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார். புகாரின்பேரில் அனி-யை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பாலில் தூக்க மாத்திரை கலந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது. 

அனி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanniyakumari School Girl case abused


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->