சூரியனின் மறைவும், சந்திரனின் எழுச்சியும் ஒரே நேரத்தில் நிகழும் அதிசய நிகழ்வு., நம்ம தமிழகத்தில் எங்கு தெரியுமா?!
kanniyakumari sun and moon
வருகின்ற 16ஆம் தேதி பௌர்ணமி நாளன்று சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட இருக்கிறது. 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் ஒரே நேரத்தில் நிகழும் இவ்விரண்டு காட்சிகளையும் கன்னியாகுமரி மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலைப் பகுதியில் மட்டும் தான் காணமுடியும்.
இதே நேரத்தில் மேற்கு பக்கமுள்ள அரபிக்கடல் பகுதியில் வர்ணஜாலம் சூரியன் மஞ்சள் நிறத்தில் கடலுக்குள் மறையும் போது கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்து போன்ற வடிவத்தில் தோன்றும்.
இந்த அற்புத காட்சியை கன்னியாகுமரி கடற்கரை பகுதி, அங்குள்ள பழத்தோட்டம் பகுதியில் உள்ள முருகன் குன்றத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழலாம்.
English Summary
kanniyakumari sun and moon