தமிழகம்: காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை! காலையிலேயே அடுத்தடுத்த இரு கொலைகள்!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதம் காரணமாக, இந்த கொலை நடைபெற்றுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தலைமறைவான பிரபல ரவுடி உட்பட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதற்கிடையே, இன்று அதிகாலை கடலூரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அதிமுக வார்டு செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

கடலூர் மாநகராட்சி நவநீதம் நகர் பகுதியை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பக்தா என்ற பத்மநாதன் (43 வயது). இன்று மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

புதுச்சேரியின் எல்லைப் பகுதியான திருப்பானம்பாக்கம் என்ற பகுதியில், இன்று அதிகாலை தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த பத்மநாதனை, காரில் வந்த மர்ம கும்ப கும்பல், அவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

நிலை குலைந்து கீழே விழுந்த பத்மநாதனை, காரில் வந்த கும்பல் வெட்டி படுகொலை செய்து விட்டு, தப்பி ஓடி உள்ளது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கடலூரில் முன்விரதம் காரணமாக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசியல் படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அதிமுக நிர்வாகி, காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் என அடுத்தடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanniyakumari Thiruvattaru congress councillor husband murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->