"காந்தியும் உலக அமைதியும்" - சிறப்புப் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்! - Seithipunal
Seithipunal


உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 76-ஆவது நினைவு நாள் "காந்தியும் உலக அமைதியும்" என்ற சிறப்புப் புகைப்படக் கண்காட்சி 30.01.2023 முதல் 05.02.2023 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 76-ஆவது நினைவு நாளை முன்னிட்டு. தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.01.2023) சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள உத்தமர் காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும், உத்தமர் காந்தியடிகளின் தியாக வரலாற்றினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், அன்னாரது 76ஆவது நினைவு நாளினை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்று (30.01.2023) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் "காந்தியும் உலக அமைதியும்" என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

இப்புகைப்படக் கண்காட்சியில் உத்தமர் காந்தியடிகளின் அகிம்சை வழியிலான சுதந்திரப் போராட்ட வரலாற்றினையும், அன்னார் காட்டிய பாதையில் தற்போதைய உலக அமைதியினை வழியுறுத்தும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், புத்தகங்களைக் கொண்டு உத்தமர் காந்தியடிகளின் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட ஏதுவாக 30.01.2023 முதல் 05.02.2023 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனுமதி இலவசம்.
 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanthiyum ulaka amaithiyum book fare


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->