சென்னையில் காணும் பொங்கல் விழா! பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் காணும் பொங்கல் நாள் அன்று, பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், "ஜனவரி 17 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக மெரினா கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

* காமராஜர் சாலையில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகும் வரை எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது.

* உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகும்போது, வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை - முத்துசாமி பாயினட் - வாலாஜா பாயின்ட் - அண்ணாசாலை பெரியார் சிலை - அண்ணாசிலை - வெல்லிங்டன் பாயின்ட் - ஸ்பென்சர் சந்திப்பு - பட்டுளாஸ் சாலை - மணி கூண்டு - GRH பாயின்ட் வழியாக டாகடர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று, தங்களது இலக்கினை அடையலாம்.

* அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில், திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கினை அடையலாம். மேலும் பாரதி சாலையானது கண்ணகி சிலையிலிருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு வாகனங்கள் செல்ல தடை செய்தும் பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் செய்யப்பட்டுள்ளது (பெல்ஸ் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்).

* பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்தும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்).

* இந்த காணும் பொங்கலுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றங்களை செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் Google வரைபடத்தில் RoadEaseapp மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். 

*  வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanum Pongal 2023 Chennai traffic


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->