பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தடை?! அடுத்தடுக்கு களமிறங்கும் கட்சிகள்! டெல்லிக்கு பறந்த மனு!
Kanyakumari PMModi CPIM KBalakrishnan
நாளை பிரதமர் நரேந்திர மோடி கேரளாவின் திருப்பானந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வரவுள்ளார்.
கன்னியாகுமரி வந்தடைந்ததும் சிறிது நேரம் ஓய்வுக்கு பின், பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.
தொடர்ந்து மே 31ஆம் தேதி மற்றும் ஜூன் ஒன்றாம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்ய உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நிகழ்ச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த தியான நிகழ்ச்சிக்கு கடுமையான எதிர்ப்பையும், விமர்சனத்தையும் முன்னெடுத்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பிலும் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் "பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்" என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளது மேலும் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kanyakumari PMModi CPIM KBalakrishnan