திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பந்தக்கால் நடும் முகூர்த்த விழாவுடன் இன்று தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


கார்த்திகை மாத தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் முகூர்த்த விழா இன்று நடைபெறுகிறது.

தமிழத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பௌர்ணமி கிரிவலம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரபலமானதாகும். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் டிசம்பர் 6ம் தேதி மாலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். 

இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்த விழா இன்று அதிகாலை 5.30 முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthigai Deepa festival starts in thuruvannamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->