கார்த்திகை தீப திருநாள்: வடபழநி ஆண்டவர் கோவிலில் 108 விளக்குகள் ஏற்றம்!
Karthigai Depa Thirunal Vadapalani Andavar Temple
கார்த்திகை திருநாளை முன்னிட்டு வட பழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள், உபயதாரர்கள் சார்பில் 108 விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அதுபோல் இந்த ஆண்டும் பக்தர்கள், உபயதாரர்கள் மூலம் 150 க்கும் மேற்பட்ட விளக்குகள் வழங்கப்பட்டன. அவற்றில் 108 விளக்குகள் வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் சன்னதியில் பக்தர்கள், உபயதாரர்கள் மூலம் ஏற்றப்பட்டன.
மூலவர் சன்னதியில் 36 குத்துவிளக்கு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பிரஹார பகுதியில் 8001 மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை மகா தீப திருநாளான இன்று அதிகாலை 4:30 மணியளவில் நடை திறக்கப்பட்டு காலை 6:30 மணி அளவில் அபிஷேகம் முடிந்து மூலவருக்கும் முருகப்பெருமானுக்கும் ராஜ அலங்காரம் நடத்தப்படுகிறது.
கார்த்திகை தீப திருநாள் தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக பொரி உருண்டை வழங்கப்படுகிறது.
English Summary
Karthigai Depa Thirunal Vadapalani Andavar Temple