விரைவில்... கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை: எங்கு? எப்போது?  - Seithipunal
Seithipunal


பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி, வள்ளியூரில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சபாநாயகர் அப்பாவு தமிழக அரசு நிதியில் கட்டப்பட்டு வரும் 12.5 கோடி மதிப்பிலான புதிய பேருந்து நிலையம் மற்றும் 4.5 கோடி மதிப்பில் கட்டப்படும் தினசரி சந்தை போன்றவற்றின் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் ஒப்பந்ததாரர்களிடம் விரைவில் பணிகளை முடிக்குமாறு தெரிவித்துவிட்டு செய்தியாளர்கள் இடம் பேசிய போது தெரிவித்திருப்பதாவது, சுமார் ரூ. 4.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. 

தினசரி சந்தை ஜனவரி மாதத்திற்கு பின்னர் திறக்கப்படும். இதில் வாகனங்கள் முன்பு செல்வதற்கான வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

மேலும் வள்ளியூர் பேரூராட்சி, தீர்மானத்தின் படி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைப்பதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை முன்பு விரைவில் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலையும் அமைக்கப்படும். இந்த சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஒரு ஆண்டிற்குள் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையும் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க பிரமுகர்கள் என பல கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunanidhi full length bronze statue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->