"வெற்றிமாறன் கூறியது தான் சரி? ராஜராஜ சோழன் இந்துவா.?"- கருணாஸ் அதிரடி.!
karunas angry with Rajaraja cholas as Hindhu
சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் வெளியானதிலிருந்து அதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.
இது பற்றி சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசிய கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.
அதில் அவர், "ராஜராஜ சோழனை இந்து என்று கூறுவது தவறானது. ராஜ ராஜ சோழன் இந்து இல்லை." என்று பேசி இருந்தார். இதை கேட்டா பலரும் அவர் இந்து தான். அதனால் தான் அவர் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கட்டி இருக்கிறார். எப்படி அவரை இன்று இல்லை என்று கூற முடியும் என்று பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ், "ராஜராஜ சோழனை இந்து அரசனாக்கி நம்மிடம் இருந்து தொடர்ந்து அடையாளங்கள் பறிக்கபடுகின்றன." என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். இது மிகவும் உண்மையான கருத்து, சரியானது.
அவரை இந்து மன்னர் என குறிப்பிடுவது தமிழர் அறத்திற்கே எதிரானதாக்கும். ”ராஜ ராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா எனும் பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது தான். இந்து மதத்தையும் அவர்கள் தான் உருவாக்கினார்கள். இந்தியா என்பது ஒன்றும் ஒரு தேசம் கிடையாது. பல தேசங்களின் ஒன்றியம் தன் இந்தியா” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
karunas angry with Rajaraja cholas as Hindhu