கோவிலுக்கு சீல் வைத்த விவகாரம்.. நீதிமன்றத்தை நாடுமாறு ஆட்சியர் அறிவுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வீரணம் பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அப்பொழுது பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவிலில் சாமி கும்பிடும் பொழுது அவருக்கு விபூதி தர மறுத்து உள்ளே நுழைய விடக்கூடாது என ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பியுள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் வட்டாட்சியர் முனிராஜ் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் படுத்தினர். இந்த நிலையில் மறுநாள் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதால் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி சம்பவ இடத்திற்கு விரைந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார்.

இந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கோட்டாட்சியர் புஷ்பா தேவி தலைமையிலான வருவாய்த்துறையினர் கோவிலுக்கு சீல் வைத்தனர். இதனால் கிராம மக்கள் அரசு அதிகாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கோட்டாட்சியரை மீட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் தங்க வைத்தனர்.

இந்த நிலையில் காளியம்மன் கோயிலை பூட்டி சீல் வைத்த அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நீதிமன்றத்தை நாடுமாறு ஆட்சியர் பிரபுசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur collector instructed to approach court in case of temple sealing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->