செந்தில்பாலாஜி வழக்கு! மீண்டும் ஐடி ரெய்டு - அதிரும் கரூர்! - Seithipunal
Seithipunal


அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் இருக்கும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான மணிக்கு சொந்தமான உணவகத்தில் இன்று வருமான வரித்துறையின் சொத்து மதிப்பீட்டு குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த வருடம் மே மாதம் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், அவரது உறவினர், நண்பர்களின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத் துறை அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஜாமின் மனு மீதான தீர்ப்பை 12ஆம் தேதி வழங்க உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான மணிக்கு சொந்தமான உணவகத்தில், இன்று வருமான வரித்துறை வருமானவரித்துறையின் சொத்து மதிப்பிட்டு குழுவினர், ஆறு பேர் சோதனை மேற்கொண்டனர். 

மேலும் இந்த உணவகத்தின் அருகில் மணிக்கு சொந்தமான கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பிற்பகல் 1:30 மணி அளவில் தங்களது சோதனையை முடித்து புறப்பட்டு சென்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Senthilbalaji Supporter mani bulding IT Raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->