வாட்டி வதைத்த வெயில்... இன்றுடன் முடிவுக்கு வந்த அக்னி நட்சத்திரம்.!
kathiri veyil today ending
கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. கத்திரி வெயில் தொடங்கிய பிறகு 100 டிகிரி வெப்பம் பதிவாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல்வேறு நகரங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
சில ஆண்டுகளில் கத்திரி வெயிலே தெரியாத வகையில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கடந்த நான்காம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல், உள் மாவட்டங்கள் மட்டுமில்லாமல் கடலோர மாவட்டங்களிலும் கடுமையான வெப்ப அலை வீசியது.
இந்த வருடம் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே ஈரோடு, திருத்தணி, வேலூர், கரூர், திருப்பத்தூர், மதுரை போன்ற 18 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

கத்தரி வெயில் தொடங்கிய சில நாட்களில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி கடந்த 8 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ததால் வெப்பத்தின் அளவு குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதற்கிடையே கடந்த 22ஆம் தேதி வாங்க கடல் காற்றழுத்தம் பகுதி உருவானதால் கத்திரி வெயிலினால் ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் குறைந்துவிட்டது. இந்நிலையில் இன்றுடன் கத்தரி வெயில் முடிவடைந்து விட்டது.
English Summary
kathiri veyil today ending