#காட்டுமன்னார்கோவில் || குடிசைக்குள் புகுந்த மணல் லாரி.! 10 மாத பெண்குழந்தை பலி.! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம்,  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில் சாலையில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டிற்குள் சுவரை இடித்துக் கொண்டு நுழைந்து கவிழ்ந்தது. 

அப்போது வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 10 மாத பெண்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.  அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, ஜே.சி.பி. எந்திரம் கொண்டு லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சாலை மறியலில் ஈடுபட்டனர். 

காவல்துறை டி.எஸ்பி. சுந்தரம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி படுத்தினர். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் குமராட்சி காவல் ஆய்வாளர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி உயரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kattumannarkovil sand lorry accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->