செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்.!! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்.!!

தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர், செந்தில் பாலாஜி இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு கடந்த 21 ஆம் தேதி அதிகாலை இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 

அதாவது இதயத்தில் நான்கு அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஐசியுவில் உள்ளதாகவும், வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kauvery hospital inform sendhil balaji health condition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->