24 மணி நேர கெடு நிறைவு.. திரவ உணவை அருந்தினார் செந்தில் பாலாஜி.. செயற்கை சுவாசமும் நிறுத்தம்..!!
Kauvery hospital said that Senthil Balaji had taken liquid food
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த ஜூன் 21ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர் குழுவால் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.
செந்தில் பாலாஜியின் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டது. நேற்று பிற்பகல் அமைச்சர் செந்தில் பாலாஜி கண் விழித்ததை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழுவால் கண்காணிக்கப்பட்டு வந்தார். மேலும் செயற்கை சுவாசம் அகற்றுவது குறித்து செந்தில் பாலாஜி கண்விழித்த 24 மணி நேரத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும் என மருத்துவ குழுவினர் நேற்று அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சேர்க்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பொருத்தப்பட்ட வென்டிலேட்டர் அகற்றப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்கியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது எழுந்து உட்கார்ந்து பேசும் அளவுக்கு உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், தற்பொழுது வாய் வழியாக உணவு எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும், முதல் கட்டமாக திரவ உணவுகளை அவர் உட்கொண்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த 6 முதல் 7 நாட்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ குழுவினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிப்பார்கள் எனவும் அதன் பிறகு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படலாம் என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kauvery hospital said that Senthil Balaji had taken liquid food