ஹெப்பரைன் ஊசி, ஆஸ்ப்ரின் மாத்திரை! செந்தில் பாலாஜியின் உடல்நிலை - காவேரி மருத்துவமனை பரபரப்பு தகவல்!
Kauvery Hospital say about Senthil Balaji health issue
அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவின் பெயரில் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்னும் மூன்று தினங்கள் கழித்து இதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று இன்று காலை தகவல் வெளியான வெளியானது.
இதற்கிடையே, அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசன் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழு, செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்ய இன்று வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.
இந்த நிலையில், காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அந்த செய்தி குறிப்பில், "ஹெப்பரைன் ஊசி, ஆஸ்ப்ரின் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால், அறுவை சிகிச்சைக்கு 5 நாளுக்கு முன் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும்.
இந்த மருந்து மாத்திரைகள் நேற்றுடன் செந்தில் பாலாஜிக்கு நிறுத்தப்பட்டதை அடுத்து, 3 - 5 நாள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்" என்று காவேரி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Kauvery Hospital say about Senthil Balaji health issue