கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி: முக்கிய தகவலை தெரிவித்த தெற்கு ரெயில்வே! - Seithipunal
Seithipunal


கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி : ரயில்கள் புறப்பாடு தாமதம்.. மாற்று பாதையில் இயக்கம்!

கவரைப்பேட்டையில் ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இரு ரயில்கள் தாமதமாக என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு புறப்பட இருந்த சென்னை - விசாகப்பட்டினம் விரைவு ரயில், மதியம் 2.40க்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10.10க்கு புறப்பட இருந்த சென்னை - அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில், மாலை 4.30க்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு ரயில்களும் சூலூர்பேட்டை செல்லாமல் அரக்கோணம் -> ரேனிகுண்டா -> கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், கவரைப்பேட்டையில் இரு ரயில் பாதைகளில் இன்று இரவுக்குள் போக்குவரத்து சீராகும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kavaraipettai Train Accident Southern Railway


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->