பல்கலைக்கழக மாணவி விஷயத்தில் வாய் மூடி மௌனமாக இருப்பதா..காங்கிரஸ் கண்டனம்!  - Seithipunal
Seithipunal


ஆளும் மைனாரிட்டி என். ஆர். காங்கிரஸ் மற்றும் பிஜேபி கூட்டணி அரசு முத்தியால்பேட்டையில் அப்பாவி சிறுமி உயிரிழந்த போது எவ்வளவு மோசமான  முறையில் கையாலாதத்தனமாக, மெத்தன போக்காக செயல்பட்டார்களோ, அதுபோன்று   பல்கலைக்கழக மாணவி விஷயத்தில் வாய் மூடி மௌனமாக இருக்காமல் உடனடியாக  பாதுகாப்பை மாணவிக்கு வழங்கிட வேண்டும் என புதுச்சேரி மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ர. ரத்னா வலியுறுத்தியுள்ளார்,

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு போதை ஆசாமிகள் நான்கு பேர் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவியிடம் கூட்டு பாலியல் வன்முறை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மாணவி பயங்கரமாக கூச்சலிட்டு சத்தம் போட்டு உள்ளார். இருப்பினும் அந்த நான்கு கயவர்களும் சேர்ந்து மாணவியை தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர். உடனடியாக அந்த மாணவி அரசு ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். 

மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பெயர் தெரியாத சில சமூக விரோதிகள் 4 நபர்கள் சேர்ந்து மாணவியை தாக்கியதாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்றதாகவும் எம்.எல்.சிபதிவு செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். 

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் பல்கலைக்கழகம் சாதாரணமாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு பிறகு தான் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சாதாரண வழக்காக பதிவு செய்துள்ளனர். தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அலட்சியப் போக்காலும், காவல்துறையின் மெத்தன போக்காலும் பாதிக்கப்பட்ட மாணவி விழியத்தில் முன்னுக்கு முரணாக பதில்களை கூறி வருகின்றனர். இது மிகவும் வேதனையான விஷியமாகும்.
 
இச்செயலால் கல்வித்துறைக்கும், காவல்துறைக்கும் மிகப்பெரிய இழக்காகும். மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இது போன்ற மோசமான சம்பவம் மாணவிக்கு ஏற்பட்டுள்ளதென்பது புதுச்சேரி ஆளும் அரசே வெட்கி தலைகுனிய வேண்டிய செயலாகும்.

மாணவிகள் நலனில் அக்கறை இல்லாத அரசு இந்த மாநிலத்திற்கு ‌தேவையா ? 
பாதிக்கப்பட்ட  பல்கலைக்கழக மாணவி பாதுகாப்பாக உள்ளாரா ? இல்லையெனில் இந்த ஆட்சியாளர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மாணவியை யாராவது மிரட்டி ஏதும் உள்ளார்களா என்று ஆளுநர் அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் இவ்விஷயத்தை தாமதமாக கையாண்ட  பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும், சாதாரண வழக்காக பதிவு செய்த காவல்துறை மீதும், கோர்ட் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நயவஞ்சக குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக அனைவரையும் கைது செய்யப்பட வேண்டும்.

இனிவரும் காலங்களிலாவது அரசு இது போன்ற மோசமான சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மாணவிகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும். ஆளும் மைனாரிட்டி என். ஆர். காங்கிரஸ் மற்றும் பிஜேபி கூட்டணி அரசு முத்தியால்பேட்டையில் அப்பாவி சிறுமி உயிரிழந்த போது எவ்வளவு மோசமான  முறையில் கையாலாதத்தனமாக, மெத்தன போக்காக செயல்பட்டார்களோ, அதுபோன்று   பல்கலைக்கழக மாணவி விஷயத்தில் வாய் மூடி மௌனமாக இருக்காமல் உடனடியாக  பாதுகாப்பை மாணவிக்கு வழங்கிட வேண்டும்.

மாணவிகள், பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு போன்று கடுமையான சட்டங்களை மைனாரிட்டி புதுச்சேரி அரசு வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இயற்ற வேண்டும். மத்தியில் மைனாரிட்டி பிஜேபி மோடி அரசு அமைந்த பிறகு தான் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டுள்ளது.  

மத்தியில் விரைவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் இளம் தலைவர்  ராகுல்காந்தி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வருவார் பெண்களுக்கான அனைத்து பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று சூளுரைத்து உள்ளார்.

மேலும் புதுச்சேரியில் உள்ள பெண்கள்,மாணவிகள் மற்றும் சிறுமிகள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டுமென்று புதுச்சேரி பிஜேபி, என்.ஆர். காங்கிரஸ் அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று இந்திய நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன் என புதுச்சேரி மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ர. ரத்னா வலியுறுத்தியுள்ளார்,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Keeping quiet about the university student? Congress condemns


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->