கேரள நிலச்சரிவு: ரூ.50 லட்சம்! உதவிக்கரம் நீட்டிய நடிகை ஜோதிகா, நடிகர்கள் சூர்யா, கார்த்தி! - Seithipunal
Seithipunal


கடந்த 29ஆம் தேதி முதல் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதி கனமழை காரணமாக, வயநாடு மாவட்டத்தின் மூன்று இடங்களில் நிலச்சரவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரவில் சிக்கி மண்ணில் புதைந்து 280 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களின் உடல் பாகங்கள் தனித்தனியாக மீட்கப்பட்ட கொடூர சம்பவமும் அரங்கேறியுள்ளது.

மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. மூன்றாவது நாளாக நிலச்சரவின் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கேரள மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் ஐந்து கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. 

இதே போல் தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் கேரள மாநில அரசுக்கு 20 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், கேரள நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக நடிகை ஜோதிகா, அவரின் கணவர் நடிகர் சூர்யா, அவரின் தம்பி நடிகர் கார்த்திக் இணைந்து 50 லட்சம் ரூபாய் கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். 

மேலும் கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala Landslide Actress Jothika Actor Suriya karthi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->