கேரளம் மீண்டு வர துணை நிற்போம்! உதவிக்கரம் நீட்டிய நடிகர் விக்ரம்! வேதனையை வெளிப்படுத்திய ஜிவி பிரகாஷ்! - Seithipunal
Seithipunal


கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் கேரள மாநிலத்தில், கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மண்ணில் புதையுண்டு இதுவரை 181 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 225 பேரை காணவில்லை என்றும் கேரள மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நிலச்சரிவு நடன்ஹா பகுதியில் எங்கு திரும்பினும் மரண ஓலம், கால் வைக்கும் இடமெல்லாம் புதைக்குழி, சேறு, சகதி, பாறைகள் என்று வேற்றுக்கிரக நிலப்பகுதி போல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 

குறிப்பாக இந்த நிலச்சரிவில் முண்டக்கை என்ற கிராமமே அழிந்து போய்விட்டதாக, நிலச்சரவிலிருந்து தப்பித்த மக்கள் கதறி அழுது கொண்டிருக்கும் காட்சியும் பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கிறது. 

நிலச்சரிவில் சிக்கி புதை உண்ட 191 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கடுமையான நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் இந்த நிலச்சரிவில் சிக்கி உள்ளதாக அவரின் தந்தை கண்ணீர் மல்க நிவாரண முகாமில் கதறி அழுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு நிலச்சரிவுக்கு, கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 20 லட்சம் நன்கொடையாக வழங்கிய நடிகர் விக்ரம் வழங்கியுள்ளார்.

குன்னூர் நகர மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கக் கோரி பொறுப்பு தலைவர் வாசிம் ராஜாவிடம் வழங்கி உள்ளனர்.

இதேபோல் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கேரளா வயநாடு துயரம் இயற்கை பேரிடர் என்ற போதிலும், என் சகோதர - சகோதரிகளின் உயிர் இழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனைகள் செய்வதறியாது தவிக்கிறேன். 

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், அரசு துறையை சார்ந்த பணியாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு, அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணை நிற்போம்" என்று இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Landslide TamilNadu Help


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->