தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு.. தமிழக அரசு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி உணவுத்துறை அமைச்சர் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிமை அளவில் ஒரு பகுதியக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ அரிசிக்கு பதிலாக கேழ்வரகை வழங்கும் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பை அடுத்து அரசுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. 

அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது, 2018 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் கேழ்வரகை பயிரிடும் பகுதியும், உற்பத்தியின் அளவு உயர்ந்த வண்ணம் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கேழ்வரகை அதிக உற்பத்தி செய்யப்படுகிறது. பொருள்முதல் இந்த திட்டத்தின்படி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட  ரேஷன் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அரிசிக்கு பதிலாக அவர்களுக்கு சொந்த விருப்பத்தின் பேரில் இரண்டு கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு 920 டன் கேழ்வரகும், தர்மபுரி மாவட்டத்திற்கு 440 டன் கேழ்வரகும் என மொத்தம் 1,360 தேவைப்படுகிறது. ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு விருப்பத்தின் பெயரில் தற்போது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. கோதுமை இந்திய உணவு கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கேழ்வரகையும் இந்திய உணவு கழகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். 

இந்தத் திட்டத்தின்கீழ் கேழ்வரகு எவ்வளவு தேவையோ, அதற்கு ஏற்ப கோதுமை  ஒதுக்கீடு சரிசெய்துகொள்ள முடியும். அதுபற்றி இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைக்கவேண்டும். கோதுமைக்கு பதிலாக கேழ்வரகை கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவு எழ வாய்ப்பில்லை. ஏனென்றால் கோதுமை கி கிலோவுக்கு ரூ.2 என்றும், கேழ்வரகு கிலோவுக்கு ரூ.1 என்றும் இந்திய உணவுக் கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kezhvaragu instead of rice in ration shops


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->